Recent Articles
Home » All posts
Sunday, 9 February 2014
Sunday, 9 February 2014
- 0 Comments
ஒரு காலத்தில் ரொம்ப யூத்தாக காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருந்த அஜீத் திடீரென்று வெயிட் போட்டு குண்டானார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது உடலில் 24 இடங்களில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்காக சாப்பிட்ட மாத்திரை மருந்துகளால் உடல் குண்டானது. அதன் பிறகு உடம்மை குறைத்தே தீருவது என்று கருதி ஒரு வருடம் கடுமையான உடற்பயிற்சி, டயட்டில் இருந்து உடம்மை குறைத்தார். திருப்பதி படத்தில் அவர் நடித்தபோது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்திருந்தார். அஜீத்தின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே நார்மல் தோற்றத்துக்கு மீண்டும் வந்தார்.
அதன்பிறகு எந்த இமேஜும் பார்க்காமல் தனது நடுத்தர வயது தோற்றத்தை வெளிப்படுத்தினார். ரஜினிக்கு அடுத்து தோற்றத்தின் இமேஜ் பற்றி கவலைப்படடாத நட்சத்திரமாக அஜீத் கருதப்படுகிறார். ஆங்காங்கே நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதுவே ஒரு அழகாக இருந்தது. அதனால் டைரக்டர் வெங்கட்பிரபு அவரை அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மங்காத்தா படத்தில் நடிக்க வைத்தார். அதுவும் நெகட்டிவ் கேரக்டரில். அடுத்து ஆரம்பம் படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பயன்படுத்திக் கொண்டார் விஷ்ணுவர்த்தன். இரண்டுமே ஹிட் என்பதால் அடுத்து வீரம் படத்திலும் அதே லுக்கில் வில்லேஜ் கெட்-அப்பாக மாற்றினார் சிவா.
அடுத்து அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில். கௌதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க அஜீத்தே வழிய வந்து அவர் படத்தில் நடிக்க இருக்கிறார். "எனக்காக பிரஷ்சா ஒரு கதை ரெடிபண்ணுங்க எல்லா பிரச்சினையையும் தீர்த்துவிடலாம்" என்று கௌதமுக்கு அஜீத் நம்பிக்கையூட்ட பக்காவான ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அஜீத்திடம் காட்டி அதற்கு ஓகேவும் வாங்கி விட்டார்.
பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார். அவர் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறார். முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் அகற்றப்பட்டு விட்டது. இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜீத்திடம் கொடுத்துள்ளார். அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜீத். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார். அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேன்ன படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜீத்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
கடல் எலி..!
கடற்கரையோரம் கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.
இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.
நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.
இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

Thursday, 6 February 2014
Thursday, 6 February 2014
- 0 Comments
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
1. மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ்
தகுதி: மார்க்கெட்டிங்/ நிதி பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கலை/ வணிகவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது: 31.12.2012 அன்று 40க்குள்.
சம்பளம்: ரூ.19,400 – 700/ 1 – 20,100 – 800/ 15 – 32,400. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு புரொபேஷன் காலத்திற்கு பின்னர் மேனேஜர் அந்தஸ்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
2. அசிஸ்டென்ட் மேனேஜர்
தகுதி: வணிகவியல்/ வணிக மேலாண்மை/ கணிதம் ஆகிய பாடங்களில் முதல் தர தேர்ச்சியில் முதுநிலை பட்டம். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். வயது: 31.12.2013 அன்று 26க்குள். மிகவும் பிற்பட்டோர் மற்றும் பிற்பட்டோருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.14,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 8 – 26,500.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500. இதை தூத்துக்குடியில் செலுத்ததக்க வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் பெயருக்கு டிடி எடுக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
http://www.tmb.in/ -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.,
Head Office, 57 V.E.Road,
Thoothukudi-628002.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.2.2014.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 17.2.2014.
Saturday, 1 February 2014
Saturday, 1 February 2014
- 0 Comments
நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் பணப்பை தொலைத்துவிட்டு எரிச்சடைந்த சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டிருக்கும். ஆனால் இனி பணப்பை தொலைந்துவிட்டால் தேடிய அலைந்து எரிச்சலடையத் தேவையில்லை.
இதற்காகவே தொலைந்த பணப்பையை இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் தொலைபேசி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்மார் வொலெட்’ என அழைக்கப்படும் இச்சாதனம் ப்ளுடூத் மூலம் தொலைபேசியிலுள்ள எப்ஸுடன் இணைந்து செயற்படக்கூடியது.
இந்த ஸ்மார்ட் வொலிட்டினை உங்கள் பணப்பைக்குள் வைத்துவிட்டு உங்கள் தொலைபேசியில் அதற்கான எப்ஸினை நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் பணப்பை எங்கே உள்ளது என ஸ்மார்ட் வொலெட் காட்டித்தரும்.
ஸ்மாட் வொலிட் சாதனமுள்ள பணப்பைக்கும் தொலைபேசிக்கும் இடையிலான தூரம் 30 அடி தூரத்தினைத் தாண்டினால் உடனடியாக தொலைபேசிக்கு சத்தத்துடன் தகவல் வழங்கும். இதில் கடைசியாக பணப்பை எங்கே பயன்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பணப்பை மட்டுமன்றி, திறப்பு, பெட்டி என தேவையான இடங்களிலும் ஸ்மார்ட் வொலிட்டினைப் பயன்படுத்தி பொருட்கள் தொலைவதையும் களவு போவதனையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பயன்பாட்டுக்கு இலகுவாக ஸ்மார்ட் வொலிட் 4.2 மி.மீ. தடிப்பில் மீளவும் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் மின்கலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவைமிகு இச்சாதனத்தை சீனாவின் ஷங்காயைச் சோந்த ஜக் ஹு என்பவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது ஸ்மார்ட் வொலெட்டின் எப்ஸ் ஐ போன், ஐபொட் மற்றும் 4.3 அன்ரொய்ட் பதிப்புகளுக்கும் ஒத்திசைகின்றது.
ஜெய்-யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்..!
சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது.
அப்படித்தான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-ஸ்வாதி இருவரும் நடித்தபோதும் அவர்களைப்பற்றி கலர் கலராக காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. அதற்கு அவர்கள் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், இப்படியெல்லாம்கூட இலவச விளம்பரம் கிடைக்கிறதே என்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
அதையடுத்து, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதும் ஜெய்யுடன், அஞ்சலியை இணைத்து காதல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த மலையாள நடிகை நஸ்ரியாவையும் அவருடன் இணைத்து வழக்கம்போல் காதல் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கு நஸ்ரியா மறுப்பு சொன்னபோதும், ஜெய் மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் முதலில் சிக்கிய ஸ்வாதி, சுப்ரமணியபுரம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு படமில்லாமல் ஆந்திராவுக்கு திரும்பி விட்டார். அதையடுத்து, படுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த அஞ்சலியோ, எங்கேயும் எப்போதும் படத்தையடுத்து சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோடம்பாக்கத்தையே காலி பண்ணி விட்டு ஓட்டம் பிடித்து விட்டார்.
அவர்களைத் தொடர்ந்து நஸ்ரியாவோ, வேகமாக படங்களில் புக்காகி வந்தவர், இப்போது பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிக்கொண்டு நடிப்புக்கே குட்பை சொல்லி விட்டார். ஆக, ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அத்தனை நடிககளுமே காணாமல் போய் விட்டார்கள்.
இந்த சேதி, தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் புதுமுக நடிகைகளுக்கு தெரியவர, கலவரமான மனநிலையுடனேயே இருக்கிறார்களாம்.
ஜெய்யுடன் சிரித்து பேசினால்கூட அது காதல் செய்தியாகி இந்த ஒரு படத்தோடு தாங்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவர் தங்களைப்பார்த்து சிரித்து பேசினால்கூட முகத்தை வெறப்பாக வைத்துக்கொண்டே நிறகிறார்களாம் நடிகைகள்.
மேலும் அடுத்தடுத்து ஜெய்யுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்டு எந்த நடிகையிடம் சென்றாலும், ஆளை விடுங்க சாமி என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்களாம்.

இந்த வருடத்தின் அதிர்ஷ்ட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். அவரின் அதிர்ஷ்டம் 2013 லேயே ஆரம்பித்துவிட்டது.
ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு ஒரு வருடம் இடைவெளிவிட்ட உதயநிதி தேர்வு செய்தது சுந்தரபாண்டியனை இயக்கி பிரபாகரனை. முதல் படம் வெளிவந்த உடனேயே ரெட் ஜெயண்ட் மாதிரியான நிறுனத்தில் இரண்டாவது படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொள்வது அபூர்வ நிகழ்வு.
பிப்ரவரி 14 இது கதிர்வேலன் காதல் ரிலீஸ். படம் எப்படி… தேறுமா இல்லையா என்பதெல்லாம் தெரியும் முன் அடுத்தப் படத்துக்கும் பிரபாகரனையே கமிட் செய்திருக்கிறார் உதயநிதி. இந்தமுறை அவர் நடிக்கவில்லை. பதிலாக தயாரிப்பு மட்டும். நடிப்பது சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க உதயநிதி விரும்பியதும், சிவகார்த்திகேயன் கண்டமேனிக்கு சம்பளம் கேட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் சில மாதங்கள் முன் பரபரப்பாகப் பேசப்பட்டதை இப்போது நினைவுகூரவும். கருத்து வேறுபாடு தீர்ந்ததால் ரெட் ஜெயண்டில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது கதிர்வேலனின் காதலுக்குப் பிறகு இந்த புதிய படம் குறித்து முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.
காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய் சேதுபதியும், காயத்ரியை இனிகோவும் காதலிக்கிறார்கள். அங்கு படிக்கும் சூரியும் இவர்களுக்கு நண்பர்களாகிறார்.
ஒருநாள், காதலித்தாகக் கூறி ஒருவனை நடுரோட்டில் அந்த ஊர்க்காரர்கள் வெட்டிச் சாய்ப்பதை பார்க்கும் இனிகோவும், விஜய் சேதுபதியும் பதறிப்போகிறார்கள். இனிகோ காதலிக்கும் காயத்ரி அந்த ஊர் தலைவரின் தம்பி மகள் என்பதால் வயிற்றில் மேலும் புளியை கரைக்கிறது. இருந்தாலும் அவர்கள் ஊர்க்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் காதலித்து வருகிறார்கள்.
ஒருநாள் இனிகோ தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி வருகிறார். வந்ததும் விஜய் சேதுபதியை காணவில்லை. அப்போது அங்கு ஒரு லெட்டர் இவரது கண்ணில் படுகிறது. அதில் விஜய்சேதுபதி தான் காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகவும், ‘நீயும் தப்பித்துக்கொள்’ எனவும் எழுதி வைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி அழைத்துக் கொண்டு சென்றவர் ஊர் தலைவரின் மகள் என்பது அப்போதுதான் இனிகோவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த ஊர்க்காரர்கள் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு ஐஸ்வர்யாவை இழுத்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் இனிகோ பதற்றத்தில் இருக்கிறார்.
இறுதியில் தனது காதலனை கொலை செய்த ஊர்க்காரர்களை ஐஸ்வர்யா பழிவாங்கினாரா? இனிகோ தனது காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே மீதிக்கதை.
நிறைய படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்த இனிகோ பிரபாகருக்கு இந்த படத்தில் ஹீரோ அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை மையப்படுத்தியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனால், தியேட்டருக்கு விஜய் சேதுபதியை எதிர்பார்த்து சென்றதால் இவரை ரசிக்க முடியவில்லை. மற்றபடி, காதல், காமெடி, ஆக்க்ஷன் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கிறது.
விஜய் சேதுபதி இப்படத்தில் நட்பின் அடிப்படையிலேயே நடிக்க ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார். ஆனால், இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருக்கு இல்லை என்பது வருத்தமே. ஹீரோயின் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யும் ஒரு மொக்கையான கதாபாத்திரம். இதை இவர் ஏற்று நடிக்காமலேயே இருந்திருக்கலாம். ரசிகர்களை ரொம்பவும் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
நாயகி காயத்ரி முன்பிருந்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். பார்க்கவே பாவம்போல் இருக்கிறார். இவரை வைத்து டூயட் எல்லாம் ஆடவைச்சு நம்மை பயமுறுத்துகிறார்கள். துணை நடிகையாக நடித்துவந்த ஐஸ்வர்யா இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக வருகிறார். கதையை தாங்கி நிற்கிற வலுவான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், இவருக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல், கடைசியில் விஸ்வரூபம் எடுப்பதுபோன்ற காட்சியை வைத்திருப்பதால் ரசிக்க முடியவில்லை.
சூரிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கல்லூரி காட்சிகளில் நன்றாக காமெடி பண்ணுகிறார். இடைவேளைக்கு பிறகு நல்ல குணசித்திர நடிகராகவும் மாறிவிடுகிறார். ‘கும்கி’யில் லட்சுமிமேனனின் அப்பாவாக நடித்திருப்பவர் இந்த படத்தில் ஊர் பெரியவராக வருகிறார். இவரைவிட இவருக்கு அடியாளாக வருபவர் மிரட்டுகிறார். அவருடைய வில்லத்தனமான கண்கள் பயமுறுத்துகின்றன.
இயக்குனர் ஒரு காதல் கதையை ஏன் திரில்லாக கொடுக்க நினைத்தார்? என்று அனைவர் மத்தியிலும் கேள்வி எழுகிறது. முக்கிய கதாபாத்திரங்களின் தன்மையை ரசிகர்களுக்கு சொல்லாமல் மறைத்து சஸ்பென்ஸ் வைப்பதாக கூறி, அதை காட்சிப்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டார். ஆனால், விஜய் சேதுபதி படம் என நம்ப வைத்து ரசிகர்களை வரவழைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பருத்திவீரனில் ‘முத்தழகு’ கதாபாத்திரம்போல் காட்டவேண்டிய ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தை சொதப்பியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கிறது.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ‘கூட மேல கூட வச்சு’ பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு படத்தில் சஸ்பென்ஸை கூட்ட உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘ரம்மி’ ஆட்டம் டம்மி.
Subscribe to:
Posts (Atom)