Recent Articles
Home » All posts
Saturday, 1 February 2014
Saturday, 1 February 2014
- 0 Comments
நம்மில் பெரும்பாலானவர்களுக்கும் பணப்பை தொலைத்துவிட்டு எரிச்சடைந்த சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டிருக்கும். ஆனால் இனி பணப்பை தொலைந்துவிட்டால் தேடிய அலைந்து எரிச்சலடையத் தேவையில்லை.
இதற்காகவே தொலைந்த பணப்பையை இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் தொலைபேசி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்மார் வொலெட்’ என அழைக்கப்படும் இச்சாதனம் ப்ளுடூத் மூலம் தொலைபேசியிலுள்ள எப்ஸுடன் இணைந்து செயற்படக்கூடியது.
இந்த ஸ்மார்ட் வொலிட்டினை உங்கள் பணப்பைக்குள் வைத்துவிட்டு உங்கள் தொலைபேசியில் அதற்கான எப்ஸினை நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் பணப்பை எங்கே உள்ளது என ஸ்மார்ட் வொலெட் காட்டித்தரும்.
ஸ்மாட் வொலிட் சாதனமுள்ள பணப்பைக்கும் தொலைபேசிக்கும் இடையிலான தூரம் 30 அடி தூரத்தினைத் தாண்டினால் உடனடியாக தொலைபேசிக்கு சத்தத்துடன் தகவல் வழங்கும். இதில் கடைசியாக பணப்பை எங்கே பயன்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பணப்பை மட்டுமன்றி, திறப்பு, பெட்டி என தேவையான இடங்களிலும் ஸ்மார்ட் வொலிட்டினைப் பயன்படுத்தி பொருட்கள் தொலைவதையும் களவு போவதனையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பயன்பாட்டுக்கு இலகுவாக ஸ்மார்ட் வொலிட் 4.2 மி.மீ. தடிப்பில் மீளவும் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் மின்கலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவைமிகு இச்சாதனத்தை சீனாவின் ஷங்காயைச் சோந்த ஜக் ஹு என்பவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது ஸ்மார்ட் வொலெட்டின் எப்ஸ் ஐ போன், ஐபொட் மற்றும் 4.3 அன்ரொய்ட் பதிப்புகளுக்கும் ஒத்திசைகின்றது.
ஜெய்-யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்..!
சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது.
அப்படித்தான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-ஸ்வாதி இருவரும் நடித்தபோதும் அவர்களைப்பற்றி கலர் கலராக காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. அதற்கு அவர்கள் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், இப்படியெல்லாம்கூட இலவச விளம்பரம் கிடைக்கிறதே என்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
அதையடுத்து, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதும் ஜெய்யுடன், அஞ்சலியை இணைத்து காதல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த மலையாள நடிகை நஸ்ரியாவையும் அவருடன் இணைத்து வழக்கம்போல் காதல் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கு நஸ்ரியா மறுப்பு சொன்னபோதும், ஜெய் மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் முதலில் சிக்கிய ஸ்வாதி, சுப்ரமணியபுரம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு படமில்லாமல் ஆந்திராவுக்கு திரும்பி விட்டார். அதையடுத்து, படுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த அஞ்சலியோ, எங்கேயும் எப்போதும் படத்தையடுத்து சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோடம்பாக்கத்தையே காலி பண்ணி விட்டு ஓட்டம் பிடித்து விட்டார்.
அவர்களைத் தொடர்ந்து நஸ்ரியாவோ, வேகமாக படங்களில் புக்காகி வந்தவர், இப்போது பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிக்கொண்டு நடிப்புக்கே குட்பை சொல்லி விட்டார். ஆக, ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அத்தனை நடிககளுமே காணாமல் போய் விட்டார்கள்.
இந்த சேதி, தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் புதுமுக நடிகைகளுக்கு தெரியவர, கலவரமான மனநிலையுடனேயே இருக்கிறார்களாம்.
ஜெய்யுடன் சிரித்து பேசினால்கூட அது காதல் செய்தியாகி இந்த ஒரு படத்தோடு தாங்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவர் தங்களைப்பார்த்து சிரித்து பேசினால்கூட முகத்தை வெறப்பாக வைத்துக்கொண்டே நிறகிறார்களாம் நடிகைகள்.
மேலும் அடுத்தடுத்து ஜெய்யுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்டு எந்த நடிகையிடம் சென்றாலும், ஆளை விடுங்க சாமி என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்களாம்.

இந்த வருடத்தின் அதிர்ஷ்ட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். அவரின் அதிர்ஷ்டம் 2013 லேயே ஆரம்பித்துவிட்டது.
ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு ஒரு வருடம் இடைவெளிவிட்ட உதயநிதி தேர்வு செய்தது சுந்தரபாண்டியனை இயக்கி பிரபாகரனை. முதல் படம் வெளிவந்த உடனேயே ரெட் ஜெயண்ட் மாதிரியான நிறுனத்தில் இரண்டாவது படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொள்வது அபூர்வ நிகழ்வு.
பிப்ரவரி 14 இது கதிர்வேலன் காதல் ரிலீஸ். படம் எப்படி… தேறுமா இல்லையா என்பதெல்லாம் தெரியும் முன் அடுத்தப் படத்துக்கும் பிரபாகரனையே கமிட் செய்திருக்கிறார் உதயநிதி. இந்தமுறை அவர் நடிக்கவில்லை. பதிலாக தயாரிப்பு மட்டும். நடிப்பது சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க உதயநிதி விரும்பியதும், சிவகார்த்திகேயன் கண்டமேனிக்கு சம்பளம் கேட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் சில மாதங்கள் முன் பரபரப்பாகப் பேசப்பட்டதை இப்போது நினைவுகூரவும். கருத்து வேறுபாடு தீர்ந்ததால் ரெட் ஜெயண்டில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது கதிர்வேலனின் காதலுக்குப் பிறகு இந்த புதிய படம் குறித்து முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.
காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய் சேதுபதியும், காயத்ரியை இனிகோவும் காதலிக்கிறார்கள். அங்கு படிக்கும் சூரியும் இவர்களுக்கு நண்பர்களாகிறார்.
ஒருநாள், காதலித்தாகக் கூறி ஒருவனை நடுரோட்டில் அந்த ஊர்க்காரர்கள் வெட்டிச் சாய்ப்பதை பார்க்கும் இனிகோவும், விஜய் சேதுபதியும் பதறிப்போகிறார்கள். இனிகோ காதலிக்கும் காயத்ரி அந்த ஊர் தலைவரின் தம்பி மகள் என்பதால் வயிற்றில் மேலும் புளியை கரைக்கிறது. இருந்தாலும் அவர்கள் ஊர்க்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் காதலித்து வருகிறார்கள்.
ஒருநாள் இனிகோ தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி வருகிறார். வந்ததும் விஜய் சேதுபதியை காணவில்லை. அப்போது அங்கு ஒரு லெட்டர் இவரது கண்ணில் படுகிறது. அதில் விஜய்சேதுபதி தான் காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகவும், ‘நீயும் தப்பித்துக்கொள்’ எனவும் எழுதி வைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி அழைத்துக் கொண்டு சென்றவர் ஊர் தலைவரின் மகள் என்பது அப்போதுதான் இனிகோவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த ஊர்க்காரர்கள் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு ஐஸ்வர்யாவை இழுத்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் இனிகோ பதற்றத்தில் இருக்கிறார்.
இறுதியில் தனது காதலனை கொலை செய்த ஊர்க்காரர்களை ஐஸ்வர்யா பழிவாங்கினாரா? இனிகோ தனது காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே மீதிக்கதை.
நிறைய படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்த இனிகோ பிரபாகருக்கு இந்த படத்தில் ஹீரோ அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை மையப்படுத்தியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனால், தியேட்டருக்கு விஜய் சேதுபதியை எதிர்பார்த்து சென்றதால் இவரை ரசிக்க முடியவில்லை. மற்றபடி, காதல், காமெடி, ஆக்க்ஷன் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கிறது.
விஜய் சேதுபதி இப்படத்தில் நட்பின் அடிப்படையிலேயே நடிக்க ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார். ஆனால், இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருக்கு இல்லை என்பது வருத்தமே. ஹீரோயின் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யும் ஒரு மொக்கையான கதாபாத்திரம். இதை இவர் ஏற்று நடிக்காமலேயே இருந்திருக்கலாம். ரசிகர்களை ரொம்பவும் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
நாயகி காயத்ரி முன்பிருந்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். பார்க்கவே பாவம்போல் இருக்கிறார். இவரை வைத்து டூயட் எல்லாம் ஆடவைச்சு நம்மை பயமுறுத்துகிறார்கள். துணை நடிகையாக நடித்துவந்த ஐஸ்வர்யா இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக வருகிறார். கதையை தாங்கி நிற்கிற வலுவான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், இவருக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல், கடைசியில் விஸ்வரூபம் எடுப்பதுபோன்ற காட்சியை வைத்திருப்பதால் ரசிக்க முடியவில்லை.
சூரிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கல்லூரி காட்சிகளில் நன்றாக காமெடி பண்ணுகிறார். இடைவேளைக்கு பிறகு நல்ல குணசித்திர நடிகராகவும் மாறிவிடுகிறார். ‘கும்கி’யில் லட்சுமிமேனனின் அப்பாவாக நடித்திருப்பவர் இந்த படத்தில் ஊர் பெரியவராக வருகிறார். இவரைவிட இவருக்கு அடியாளாக வருபவர் மிரட்டுகிறார். அவருடைய வில்லத்தனமான கண்கள் பயமுறுத்துகின்றன.
இயக்குனர் ஒரு காதல் கதையை ஏன் திரில்லாக கொடுக்க நினைத்தார்? என்று அனைவர் மத்தியிலும் கேள்வி எழுகிறது. முக்கிய கதாபாத்திரங்களின் தன்மையை ரசிகர்களுக்கு சொல்லாமல் மறைத்து சஸ்பென்ஸ் வைப்பதாக கூறி, அதை காட்சிப்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டார். ஆனால், விஜய் சேதுபதி படம் என நம்ப வைத்து ரசிகர்களை வரவழைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பருத்திவீரனில் ‘முத்தழகு’ கதாபாத்திரம்போல் காட்டவேண்டிய ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தை சொதப்பியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கிறது.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ‘கூட மேல கூட வச்சு’ பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு படத்தில் சஸ்பென்ஸை கூட்ட உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘ரம்மி’ ஆட்டம் டம்மி.
சம்பளம் பெறாமல் தனுசுக்காக நடனம் ஆடிய சிவகார்த்திகேயன்..!
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் எதிர் நீச்சல்.இதில் ஒரு பாடல் காட்சியில் தனுஷ் மற்றும் நயன்தாராவும் குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார்க்ள்.தற்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ் நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறாராம்.
தனுஷ், அமலாபால் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான Wunderbar Films என்ற நிறுவனத்திற்காக தயாரிக்கின்றார். இந்த படத்தில் அனிருத் இசையமைத்த ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் நடனம் ஆடியுள்ளாராம். இந்த பாடலுக்கு தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகிய மூவருமே நடனம் ஆடி கலக்கியுள்ளனராம். இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடந்தது.
மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடனம் ஆடியுள்ளதால் இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளதாக நடன இயக்குனர் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு நடனம் ஆட அனிருத், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

இன்று என்னதான் விண்டோஸ் 8 வந்தாலும் இன்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள் அதையே பயன்படுத்திக் கொண்டு தான் உள்ளனர்.
இதில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.
இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்
விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும்.
இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும். Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும்.
இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்;
சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும்.
இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.
நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.
பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும்.
எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.
இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும்.
எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.
மேலும், விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும்.
இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும்.
இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.
பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.
Thursday, 30 January 2014
Thursday, 30 January 2014
- 0 Comments
இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இயக்கிவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றுவருகின்றன. சூர்யா - சமந்தா முதல் முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துவருகின்றனர். இப்படம் வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நேற்று சூர்யா, சந்தோஷ் சிவனுக்கு சர்ப்பிரைஸ் பார்ட்டி அளித்துள்ளார்.
அஞ்சான் திரைப்படக்குழுவினர் பெரும்பாலானோர் கலந்து கொண்ட இந்தப் பார்ட்டியில் மேலும் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அஞ்சான்
திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துவரும் யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த தனஞ்செயன் கோவிந்த், தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபுதேவா, ரித்தேஷ் தேஷ்முக், அனிருத், ராகினி ஆகியோரும் இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)