Recent Articles

Monday, 28 October 2013

அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன்!

Monday, 28 October 2013 - 0 Comments


நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.


1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதானேபோது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

பின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.



சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் "ராமன் கோடுகள்" என்றும், அந்த விளைவு "ராமன் விளைவு" என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

இந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு 'ஹியூம்' பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.

“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.

முக்கிய வெளிநாட்டு தூதுவர்களும், பயணிகளும்!


மெகஸ்தனிஸ் :
கிரேக்க தூதுவர்
நாடு : கிரேக்கம்
காலம் : மெளரியர் ஆட்சிக்காலம்

தாலமி :
கிரக்க பயணி
நாடு : கிரேக்கம்
காலம் : 2ஆம் நூற்றாண்டு



பாஹியான் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : சந்திரகுப்தர்

யுவான் சுவாங் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : ஹர்ஷர்

இட்சிங் :
சீனப் பயணி
நாடு : சீனா
காலம் : ஹர்ஷர்

அல்பெருனி :
நாடு : மத்திய ஆசியா
காலம் : கஜினிமுகமது

வெனிஸ் பயணி
நாடு : வெனிஸ்

இபின்படூடா :
மொராக்கோ பயணி
காலம் : துக்ளக்

ult, m


உங்களுக்கு எத்தனை காந்தியை தெரியும்?




அமெரிக்க காந்தி - மார்டின் லூதர் கிங்


ஆப்பிரிக்க காந்தி - கென்னத் காண்டா


தென் ஆப்பிரிக்க காந்தி- நெல்சன் மண்டேலா

 
 
எல்லை காந்தி-கான் அப்துல் கபார்கான்


தென்னாட்டு காந்தி - அண்ணா

 
 
தமிழ்நாட்டு காந்தி- திரு.வி.க
 
 
கருப்பு காந்தி - காமராஜர்


காந்திய கவிஞர்-நாமக்கல் கவிஞர்

Sunday, 27 October 2013

காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் மொரார்ஜி தேசாய்!

Sunday, 27 October 2013 - 0 Comments




மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். 

இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே. 

மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவருக்கு முன்பு பிரதமராக இருந்தவர் :  இந்திரா காந்தி
இவருக்கு பின்பு பிரதமராக இருந்தவர் : சரண் சிங்
அரசியல் கட்சி : ஜனதா கட்சி
இறப்பு : 10 ஏப்ரல் 1995



தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்!

1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்

1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921

2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926

3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930

4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932 

5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936

6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936

7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937

8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937

9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939

10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947

11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949

12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952

13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954

14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963

15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967

16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969

17. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976

18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987

19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988

20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991

21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996

22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001

23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001

24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002

25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006

26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011

27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்


-----------------------------------------------------------------------------
அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.

மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்

மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்


-----------------------------------------------------------------------------

இதுவரை பதவி வகித்த இந்திய ஜனாதிபதிகள்!

 



1. திரு. ராஜேந்திர பிரசாத் - 26.1.1950 முதல் 13.5.1962 வரை

2. திரு. S. ராதா கிருஷ்ணன் - 13.5.1962 முதல் 13.5.1967 வரை

3. திரு. ஜாகிர் உசேன் - 13.5.1967 முதல் 3.5.1969 வரை

திரு. V. V. கிரி - 3.5.1969 முதல் 20.7.1969 வரை (தற்காலிகம்)

திரு. முகம்மது இதாயதுல்லா - 20.7.1969 முதல் 24.8.1969 வரை (தற்காலிகம்)

4. திரு. V. V.கிரி - 24.8.1969 முதல் 24.8.1974 வரை

5. திரு. பக்ருதீன் அலி அகமது - 24.8.1974 முதல் 11.2.1977 வரை

திரு. B. D. ஜாட்டி - 11.2.1977 முதல் 25.7.7197 வரை (தற்காலிகம்)

6. திரு. நீலம் சஞ்ஞீவி ரெட்டி - 25.7.1977 முதல் 25.7.1982 வரை
7. திரு. கியானி ஜெயில் சிங் - 25.7.1982 முதல் 25.7.1987 வரை

8. திரு. R. வெங்கடராமன் - 25.7.1987 முதல் 25.7.1992 வரை

9. திரு. சங்கர் தயால் சர்மா - 25.7.1992 முதல் 25.7.1997 வரை

10. திரு. K. R. நாராயணன் - 25.7.1997 முதல் 25.7.2002 வரை

11. திரு. A. P. J. அப்துல் கலாம் - 25.7.2002 முதல் 25.7.2007 வரை

12. திருமதி. பிரதிபா பாட்டில் - 25.7.2007 முதல் 25.7.2012 வரை

13. திரு. பிரணாப் முகர்ஜி - 25.7.2012 முதல்

இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர்

1) டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) 1950-1962
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார்.


டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை
வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார். 

2) டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 5, 1888 - ஏப்ரல் 17, 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


3) டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969

சாகீர் உசேன் (ஜாகீர் உசேன்) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.