Recent Articles

Sunday, 27 October 2013

முற்கால நாணயங்கள் !

Sunday, 27 October 2013 - 0 Comments

 


தினார் - குப்தர் தங்க நாணயங்கள்

கச்சா - இராம குப்தர்

டாங்கா ஜிட்டால் - டெல்லி சுல்தான்கள்

பகோடா - விஜய நகர நாணயம்

டாம் - அக்பர் நாணயம்

இந்திய வரலாறு | கல்வெட்டுகளும், பட்டயங்களும்


அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்

ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்

மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்

ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி

உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்

பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்

ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்

உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்

உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை

ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்

இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்!

 



மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)

தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)

பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்)

பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்)

யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்)

அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது)

இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்)

LIST OF PARLIAMENT BY COUNTRY!



Country
legislatures
Afghanistan
Shora
Andorra
General Council
Albania
People's Assembly
Azerbaijan
Melli Majlis
Argentina
National Congress
Australia
Federal Parliament
Austria
National Assembly
Bahrain
Consultative Council
Bangladesh
Jatiya Sansad
Bhutan
Tsogdu
Britain
Parliment (House of Common's and House of Lords)
Bulgaria
Narodno Subranie
Colombia
Congress
Canada
Parliament
China
National People's Assembly
Crotia
Sabor
Czech Republic
Chamber of Deputies and Senate
Denmark
Folketing
Finland
Eduskusta (Parliament)
Germany
Bundestag (Lower House) and Bundesrat (Upper House)
Greece
Chamber of Deputies
Iceland
Althing
India
Sansad(parliament)
Iran
Majlis
Israel
Knesset
Japan
Diet
Korea(North)
Supreme People's Assembly
Korea(South)
National Assembly
Lithuania
Seimas
Maldives
People's Majlis
Mongolia
Great People's Khural
Myanmar
Pyithu Hluttaw
Nepal
Rashtriya Panchayat
Netherlands
The Staten General
Norway
Storting
Oman
Monarchy
Pakistan
National Assembly & Senate
Poland
Sejm
Russia
Federal Assembly
Duma & Federal Council
Spain
Cortes
Sweden
Riksdag
Saudi Arabia
Majlis Al Shura
USA
Congress




ஆண்டு விழாக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்!

வ.எண்ஆண்டுசிறப்புப்பெயர்
1முதல் ஆண்டுகாகித விழா
2இரண்டாம் ஆண்டுபருத்தி விழா
3மூன்றாம் ஆண்டுதோல் விழா
4நான்காம் ஆண்டுமலர், பழ விழா
5ஐந்தாம் ஆண்டுமர விழா
6ஆறாம் ஆண்டுசர்க்கரை ,கற்கண்டு விழா

7ஏழாம்ஆண்டுகம்பளி, செம்பு விழா
8எட்டாம் ஆண்டுவெண்கல விழா
9ஒன்பதாம் ஆண்டுமண்கலச விழா
10பத்தாம் ஆண்டுதகரம் ,அலுமினியம் விழா
11பதினோறாம் ஆண்டுஇரும்பு விழா
12பனிரெண்டாம் ஆண்டுலினன் விழா
13பதிமூன்றாம் ஆண்டுமின்னல் விழா
14பதினான்காம் ஆண்டுதந்த விழா
15பதினைந்தாம் ஆண்டுபடிக விழா
16இருபதாம் ஆண்டுபீங்கான் விழா
17இருபத்தைந்தாம் ஆண்டுவெள்ளி விழா
18ஐம்பதாம் ஆண்டுபொன் விழா
19அறுபதாம் ஆண்டுவைர விழா
20எழுபத்தைந்தாம் ஆண்டுபவள விழா
21நூறாம் ஆண்டுநூற்றாண்டு விழா

TNPSC GK Question in tamil !

1. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு கூறுவர்?
(A) ஓரிகாமி
(B) சசுகியோ
(C) மசிகுயூ
(D) வசிகுஇ
Answer: (A) ஓரிகாமி

2. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர் யார்?
(A) மகேந்திரவர்மன்
(B) ராஜசிம்மன்
(C) நரசிம்மவர்மன்
(D) நந்திவர்மன்
Answer: (A) மகேந்திரவர்மன்



3. முட்டாள்களின் சங்கம் என குறிப்பிடப்பட்ட சங்கம் எது?
(A) ஐக்கிய நாடுகள் சங்கம்
(B) சர்வதேச சங்கம்
(C) ஐரோப்பிய ஒன்றியம்
(D) ஐக்கிய அரபுநாடுகள் கூட்டமைப்பு
Answer: (B) சர்வதேச சங்கம்

4. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (D) தவேகார் சூசி

5. முசோலி ஆசிரியராக இருந்த இத்தாலிய சமதர்ம பத்திரிக்கை எது?
(A) இத்தாலி
(B) மெயின்காப்
(C) அவந்தி
(D) மெயின்பார்ட்
Answer: (C) அவந்தி

6. 1911ம் ஆண்டு சீனாவில் புரட்சி ஏற்பட்டு யாருடைய தலைமையில் குடியரசு நாடானது?
(A) ஆன்சான் சூயி
(B) ஆன்ரூஸ் பெர்னான்டஸ்
(C) சன்யாட்சென்
(D) தவேகார் சூசி
Answer: (C) சன்யாட்சென்

7. எந்தத் துறைக்கு தங்கத் தாமரை விருது (Swarna Kamal) வழங்கப்படுகிறது ?
(A) இலக்கியம்
(B) சினிமா
(C) விளையாட்டு
(D) சமூகவியல்
Answer: (B) சினிமா

8. நூறு சதவிகிதம் படித்தவர்கள் உள்ள பகுதி என்று இந்தியாவிலேயே புகழ் பெற்ற முதல் நகரம் எது?
(A) கொச்சி
(B) திருவனந்தபுரம்
(C) கோட்டயம்
(D) கோழிக்கோடு
Answer: (C) கோட்டயம்

9. மக்கள் இலக்கியம் எனப்போற்றப்டுவது?
(A) சிலப்பதிகாரம்
(B) இராமாயணம்
(C) மணிமேகலை
(D) சித்தர்பாடல்கள்
Answer: (D) சித்தர்பாடல்கள்

10. துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
(A) டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு
(B) கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு
(C) விளையாட்டு பயிற்சியாளருக்கு
(D) ஹாக்கி விளையாட்டு வீரருக்கு
Answer: C) விளையாட்டு பயிற்சியாளருக்கு

TNPSC EXAM - ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி ?

முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.
 சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும்.
அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள்.
 டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது.

 பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும்.

இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.. 

பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.


இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.


இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.


இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,


பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,


எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.


அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவ தில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.

 

 

 

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.